×

சென்னை, சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு பணியாளர் குடியிருப்பு கட்டிடத்தை தரமாக, விரைவாக கட்டி முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் கட்டப்பட்டு வரும் அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பிறகு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை, தாடண்டர் நகர் சைதாப்பேட்டை தொகுதியின் ஒரு பகுதி. இதில்தான், தமிழக அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அரசின் சார்பாக கட்டி கொடுக்கின்ற குடியிருப்புகள் உள்ளன. பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்கள், அரசு ஒதுக்கீட்டில் குடியிருக்கிறார்கள். ஏ-வகை குடியிருப்புகள் 100, பி-வகை குடியிருப்புகள் 136, சி-வகை குடியிருப்புகள் 812 உள்ளன. பொதுப்பணித்துறையை சார்ந்த பொறியாளர்களுக்கான 41 குடியிருப்புகள் உள்ளன. தாடண்டர் நகர் வளாகத்தில், 72 பழைய குடியிருப்புகள் இருக்கின்றன.

அவற்றை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. புதிதாக, 190 பி-வகை குடியிருப்புகள் ரூ.88.49 கோடி மதிப்பீட்டில், கட்டுவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த குடியிருப்பு, 19 பல்லடுக்கு குடியிருப்பு கட்டிடம் ஆகும்.  இதில், 10 அடுக்கு குடியிருப்புகள் கட்டுமான பணி முடிவடைந்துள்ளது. இன்னும் 9 அடுக்கு குடியிருப்புகள் கட்டப்பட வேண்டியுள்ளதால், அவற்றை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், புதிதாக 190 சி-வகை குடியிருப்புகள் கட்டுவதற்கு, கடந்த 1ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Tags : Minister ,AV Velu ,Dadander Nagar ,Saidapet ,Chennai , Minister A.V.Velu orders to complete government employee residential building in Thandar Nagar, Saidapet, Chennai with quality and speed.
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...