×

கூடுதல் கட்டணம் வசூலித்தால் மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும், அதைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், தனியார் சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் டீன்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
* சுயநிதி கல்லூரிகள், 2022-23 கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சுற்றுகளுக்கான கவுன்சிலிங்குக்கு மறுப்பு தெரிவித்தாலோ, கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விடவும் கூடுதலாக வசூலித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை சுயநிதி கல்லூரிகள் கண்டிப்புடன் பின்பற்றவேண்டும்.
* இந்த சூழலில், மாணவர்களிடம் இருந்து ஏதாவது குறிப்பிட்ட புகார்கள் பெறப்பட்டால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து அல்லது திரும்பப்பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* தேர்வுக்குழு விதித்த விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களை சேர்க்கவேண்டும் என்று சுயநிதி கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மாணவர் சேர்க்கையில் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மீறும்பட்சத்தில், அது கடுமையானதாக இருக்கும் என்பதை கவனத்தில்கொண்டு, சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Department of Medicine ,Public , Revocation of accreditation of medical college if extra fees are charged: Department of Medicine and Public Welfare warns
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...