மின்துறை தெற்கு மண்டல அலுவலகம் காஞ்சிபுரம் மண்டலமாக மாற்றம்

சென்னை: மின்சாரத்துறையின் கீழ் இயங்கி வந்த தெற்கு மண்டல அலுவலகத்தின் பெயர் காஞ்சிபுரம் மண்டலம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்சாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: மின்சாரத்துறையின் கீழ் இயங்கி வந்த தலைமைப் பொறியாளர்/பகிர்மானம், தெற்கு மண்டல அலுவலகம் இனி காஞ்சிபுரம் மண்டலம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, நாளை முதல் புதிய அலுவலகம் காஞ்சிபுரத்தை தலைமை இடமாக கொண்டு அண்ணா மாளிகை, ஒலிமுகம்மது பேட்டை, வேலூர் ரோட்டில் உள்ள காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தின் தரை தளத்தில் உள்ள வளாகத்தில் செயல்படும். பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் இதில் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: