×

மலேசியா-சிங்கப்பூருடன் தொழில் ஒப்பந்தங்கள் இளைய சமுதாய தொழில் வளர்ச்சியில் ஒரு மைல் கல்: ஏ.எம்.விக்கிரமராஜா பெருமிதம்

சென்னை: மலேசியா-சிங்கப்பூர் தொழில்-வணிக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இளைய சமுதாய தொழில் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேரமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தொலைநோக்கு சிந்தனையில் உருவாக்கப்பட்ட இளம் தொழில் இளைஞர்களை தொழில்-வணிக சிந்தனையில் வணிகத்தையும், முனைவோர் ஈடுபடுத்தி அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய பொருளாதார வளர்ச்சியையும், ஏற்றுமதி வாய்ப்புகளையும், விரிவாக்கி மேம்படுத்திட உதவும் வகையில் மலேசியா, சிங்கப்பூர் தொழில் வணிக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெற்றிகரமாக நடத்தி தனது முதல் பயணத்தை துவக்கி இருக்கின்றது.

தமிழகத்தில் தொழில்-வணிக செயல்பாட்டினை ஊக்குவித்திடவும், மேம்படுத்திடவும் முத்தாய்ப்பாய் அமைந்த மலேசியா-சிங்கப்பூர் தொழில்-வணிக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இளைய சமுதாய தொழில் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்றும், எதிர்கால இளைஞர்கள் முன்னேற்றத்திற்கும், தமிழக பொருளாதார முன்னேற்றத்திற்கும், புதிய வேலை வாய்ப்புகள் பெருக்கத்திற்கும் உதவும் என பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பெருமை கொள்வதாக தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Malaysia ,Singapore ,AM ,Wickramaraja , Industry agreements with Malaysia-Singapore a milestone in youth entrepreneurship development: AM Wickramaraja proud
× RELATED பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு...