சென்னை: மலேசியா-சிங்கப்பூர் தொழில்-வணிக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இளைய சமுதாய தொழில் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேரமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தொலைநோக்கு சிந்தனையில் உருவாக்கப்பட்ட இளம் தொழில் இளைஞர்களை தொழில்-வணிக சிந்தனையில் வணிகத்தையும், முனைவோர் ஈடுபடுத்தி அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய பொருளாதார வளர்ச்சியையும், ஏற்றுமதி வாய்ப்புகளையும், விரிவாக்கி மேம்படுத்திட உதவும் வகையில் மலேசியா, சிங்கப்பூர் தொழில் வணிக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெற்றிகரமாக நடத்தி தனது முதல் பயணத்தை துவக்கி இருக்கின்றது.