இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த அக். 7ம் தேதி மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை, இலங்கை கடற்படையினர் படகுடன் சிறை பிடித்தனர். கைதான மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் 7 பேரும் நேற்று, ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை செய்த நீதிபதி, அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரும், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

Related Stories: