குஜராத்தில் மேலும் ஒரு காங். எம்எல்ஏ ராஜினாமா

அகமதாபாத்: குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 1, 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத்தில் 11 முறை எம்எல்ஏ.வாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மோகன்சிங் ரத்வா, நேற்று முன்தினம் திடீரென கட்சியில் இருந்து விலகினார். ரத்வா பழங்குடியின தலைவரான இவர், பாஜ.வில் சேர உள்ளதாக தெரிகிறது. இந்த பரபரப்பு அடங்கும் முன்பாக, பகவான் பராத் என்ற காங்கிரஸ் எம்எல்ஏ.வும் நேற்று ராஜினாமா செய்தார். பாஜ.வில் சேர உள்ளதாக இவர் தெரிவித்தார். அடுத்தடுத்து 2 எம்எல்ஏ.க்கள் விலகி இருப்பது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: