உபி.யில் அசம்கானின் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் சதார் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ.வாக இருந்த சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அசம்கானுக்கு, வெறுப்பு பேச்சு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராம்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரின் எம்எல்ஏ பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்த சிறை தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அசம் கான் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அசம்கான் தனது தண்டனைக்கு தடை கோரியுள்ள மேல்முறையீடு மனுவை விசாரித்து, சிறப்பு அமர்வு நீதிமன்றமே முடிவு எடுக்கலாம். இதனால், நவ.10ம் தேதி (இன்று) வரை சதார் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடாது. நவம்பர் 11க்கு பிறகு அறிவிப்பு வெளியிடலாம்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: