பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாக். டிரோனை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் அடிக்கடி டிரோன்கள் பறந்து இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சித்து வருகிறது. இவற்றை தடுக்க, எல்லை பகுதியில் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் பஞ்சாப் எல்லையில் பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11:25 மணியளவில் ‘ஹெக்ஸா காப்டர்’ ரக டிரோன் ஊடுருவ முயன்றது. இதை பார்த்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். வயல்வெளியில் விழுந்த அதை கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: