ஹர்திக் படேல், ரவீந்திர ஜடேஜா மனைவிக்கு சீட்: குஜராத் பாஜக வேட்பாளர்கள் வெளியீடு? டெல்லியில் மோடி, நட்டா, அமித் ஷா ஆலோசனை

புதுடெல்லி: குஜராத் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ஹர்திக் படேல், ரவீந்திர ஜடேஜா மனைவி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குஜராத் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில்  இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுடன்  குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளும் வரும் டிசம்பர் 8ம் தேதி  அறிவிக்கப்படும். இமாச்சல் பிரதேசத்தில் வரும் 12ம் தேதி தேர்தல் நடப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன.

குஜராத்தில் ஆளும் பாஜக இன்னும் தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கவில்லை. காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை பெரும்பாலும் அறிவித்துவிட்டன. இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் நடக்கிறது. இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் பூபேந்திரபாய் படேல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இன்றைய கூட்டத்தில் குஜராத்தில் பாஜகவின் பிரசாரத் திட்டங்கள் குறித்தும், வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில், ‘காங்கிரசில் இருந்து பாஜகவில் சேர்ந்த ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ஆகியோருக்கு சீட் வழங்க வாய்ப்புள்ளது. 20 முதல் 25 சதவீத எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடைக்காது. புது முகங்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்’ என்று கூறின.

Related Stories: