×

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம் புரண்டது: சென்னை ரயில்கள் தாமதம்

ஐதராபாத்: ராஜமுந்திரியில் சரக்கு ரயில் தடம் புரண்டதையடுத்து தென் மத்திய ரயில்வே நிர்வாகம் பல பயணிகள் ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ராஜமகேந்திராவரம் ரயில் நிலையம் வழியாக இன்று அதிகாலை 3 மணியளவில் சென்று கொண்டு சரக்கு ரயில் திடீரெ தடம் புரண்டதையடுத்து, அவ்வழியாக செல்லும் பல ரயில்களை தென்மத்திய ரயில்வே (எஸ்சிஆர்) ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ ராஜமுந்திரியில் சரக்கு ரயில் தடம் புரண்டதையடுத்து கொல்கத்தா-சென்னை ரயில் பாதையில் பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தென் மத்திய ரயில்வே (எஸ்சிஆர்) சார்பில் இயக்கப்படும் ஒன்பது ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. விஜயவாடா - லிங்கம்பள்ளி ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. சரக்கு ரயில் தடம் புரண்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் நிறைவுற்ற பின் பயணிகள் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன’ என்றனர்.

Tags : Andhra Pradesh ,Chennai , Freight train derails in Andhra Pradesh: Chennai trains delayed
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி