×

வடதமிழகம் மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வடதமிழ்நாடு மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது; வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வரும் 11, 12-ம் தேதிகளில் சென்னை உட்பட வட தமிழ்நாடு மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த பகுதிகளில் 12 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Northeast ,Delta ,Chennai , Orange Alert for Northeast and Delta Coastal Districts: Chennai Meteorological Department Information
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு