நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 3 விக்கெட் மட்டுமே இழந்து அணி 20-வது ஓவரில் வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Related Stories: