வேதாரண்யத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கோயில் இடம் மீட்பு

வேதாரண்யம் : வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர சுவாமிக்கு வேதாரண்யம் தெற்கு வீதியில் சோமவார மடம் இருந்து வருகிறது. இந்த மடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை திருப்பூண்டி சைவ செட்டியார்கள் 4வது சோமவாரத்தில் உபயங்கள் செய்து, சாமி புறப்பாடு முடிந்தவுடன் சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.

இந்த இடத்திற்கு திருப்பூண்டி சைவ செட்டியார்கள் சார்பில் கோவிலுக்கு முறையாக குத்தகை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த கட்டிடத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார். தற்போது அந்த கட்டிடம் சிதிலமடைந்ததால் அந்த கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்கள் அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி கோரினர். இந்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறையினர் அந்த கட்டித்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் தற்சமயம் அந்த கட்டிடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வரும் தனி நபருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு, அதன் நகல் கதவில் ஒட்டப்பட்டது. அந்த ஆக்கிரமிப்புதாரர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குடியிருந்து வந்தார்.இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுபடி நாகை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, வேதாரண்யம் கோவில் நிர்வாக அதிகாரி கவியரசு மற்றும் வருவாய்துறையினர், கோவில் பணியாளா்கள் ஜே.சி.பிஇயந்திரம் மூலம் கட்டிடத்தை வேதாரண்யம்காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆய்வாளர்கள்குணசேகரன் கன்னிகா, பசுபதி, மற்றும் போலிசார், பாதுகாப்புடன் பழுதடைந்த ஓட்டுவீட்டை இடித்து அகற்றினர். பின்பு திருக்கோயில் வசம் இடம் எடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க பட்டசொத்தின் மதிப்பு சுமார்ரூ. 1 கோடி என கூறப்படுகிறது.

Related Stories: