16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

சென்னை: 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் விஷு மஹாஜன் வெளியிட்டார்.  தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பட்டியல் வெளியிடப்பட்டது. 2023ம் ஆண்டு வாக்காளர் வரைவு பட்டியலின்படி சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளில் 38,92,457 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 19,15,611,  பெண் வாக்காளர்கள் 19,75,788, 1,058 மூன்றாம் பாலினத்த வாக்காளர்களும் உள்ளனர்.

அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,05,994 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுக தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.  சென்னையில் மொத்தமாக 3,723 வாக்குச்சாவடிகள் உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை 2.14 லட்சம் வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். இதேபோல் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வல்லவன் வெளியிட்டார். வரும் 19,20, டிசம்பர்.3,4 ஆகிய தேதிகளில் பிரத்யேக வாக்காளர் சேர்ப்பு பணி நடைபெறும் என ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: