மருத்துவ படிப்பில் சிறப்பு இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி கிராமப்புற மாணவர்கள் முன்னேற வேண்டும்-கல்வி அலுவலர் வேண்டுகோள்

ஊட்டி : மருத்துவ படிப்பில் சிறப்பு இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி கிராமப்புற மாணவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் கேட்டுக்கொண்டார்.

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு கவுன்சில், ஜெஎஸ்எஸ்., ராய்ச்சி மற்றும் உயர் கல்வி குழுமம் ஆகிய சார்பில் நமது உடல் நலம் நமது கையில் என்ற தலைப்பில் பள்ளி குழந்தைகளுக்காக பிரத்தியேக உடல்நலம் பேணுவது பற்றிய கண்காட்சியும் கருது பட்டறை ஊட்டியில் உள்ள ஜெஎஸ்எஸ்., பார்மசி கல்லூரியியல் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் தனபால் வரவேற்றார். மருந்தாய்வியல் துறை தலைவர் முனைவர் கிருஷ்ணவேணி கருத்தரங்கின் முக்கியத்துவத்தை விளக்கினார். நீலகிரி மாவட்டத்தின் சமாஜரா சிக்ஷா திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் குமார் மற்றும் ஜெஎஸ்எஸ்., பள்ளியின் முதல்வர் நந்தகுமார், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நேர்முக உதவியாளர் அர்ஜூனன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலகர் தாமோதரன் தலைமை வகித்து பேசுகையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசு சார்ந்த அமைப்புகள் நிதி வழங்க வேண்டும். இந்த நிதியை சரியான முறையில் பயன்படுத்தி இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால் அனைத்து பள்ளி மாணவர்களும் பயன் பெறுவர்கள். மிக முக்கியமாக அரசு பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியில் காட்டுவதன் மூலம் அவர்களின் படிப்பு மற்றும் உடல்நலனுடன் செயல்முறை திறனும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பள்ளி மாணவர்கள் இது போன்ற வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்கும் மாணவியர்கள் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் சேர அரசு வழங்கியுள்ள சிறப்பு இட ஒதுக்கிட்டை பயன்படுத்தி கிராமப்புற பள்ளி மாணவர்களும் நகர்புற மாணவர்களுக்கு இணையாக முன்னேற வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் ஊட்டி தாலுகாவில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 23 பள்ளிகளை சேர்ந் 287 மாணவர்கள் 88 அறிவியல் கண்டுபிடுப்புகளை விளக்கினார்கள். தொடர்ந்து வினாடி வினா போட்டிகளும் நடந்து. இதில், மாணவர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் சிறந்த அறிவியல் கண்டிப்புடுப்புகளை வழங்கிய பள்ளி மாணவர்களுக்கும், வினாடி வினாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முனைவர் மெய்யனாதன் நன்றி தெரிவித்தார்.

Related Stories: