6.5 அடி உயரம்..4,300 அடி நீளம்!: எகிப்தில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு: பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறைக்கான பாதையா?

எகிப்து: எகிப்து நாட்டின் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை இருப்பதாக கூறப்படும் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சுரங்கப்பாதை பண்டைய தபோசிரிஸ் மாக்னா கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் வடக்கு கடற்கரையில் 4,300 அடி நீளமுள்ள பாறையில் செதுக்கப்பட்ட சுரங்கப்பாதை எகிப்திய தொமிடிக்கன்  தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தபோசிரிஸ் மாக்னா கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை 6.5 அடி உயரம் கொண்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் கிளியோபாட்ரா மற்றும் மார்க் ஆண்டனி ஆகியோர் புதைக்கப்பட்டிருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் சந்தேகித்துள்ளனர்.

மேலும் இந்த சுரங்கப்பாதை 21ம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே அகழ்வாராய்ச்சியில் பல பீங்கான் ஜாடிகள், பானைகள், சேறு மற்றும் மணல் வண்டல்களுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு.320 மற்றும் கி.மு.1303க்கு இடையில் எகிப்திய கடற்கரையில் 23 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் தபோசிரிஸ் மாக்னா கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து நீரில் மூழ்கியதாகவும் தெரியவந்துள்ளது.

Related Stories: