ஆசிரியர்கள் கண்டித்ததால் விபரீதம்!: பெங்களூருவில் 14வது மாடியில் இருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!!

பெங்களூரு: பெங்களூருவில் ஆசிரியர்கள் கண்டித்ததால் 14வது மாடியில் இருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹின், பள்ளியில் நடந்த தேர்வு ஒன்றில் காபி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மோஹினுக்கு கடுமையான தண்டனை தந்ததாக தெரிகிறது. மனமுடைந்த மாணவன் மோஹின், பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது நாகவாலா என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி 14வது மாடியில் இருந்து குதித்தார்.

அப்போது கீழே விழாமல் மாடியின் சுவற்றில் சிக்கிக்கொண்ட மாணவனை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் மாணவன் தனது இரு கைகளை உழுவிட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். மாணவன் தற்கொலை குறித்து சம்பிஹேவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு மாணவன் மொஹின் எவ்வாறு சென்றான்? என்பது குறித்தும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: