ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் படம்: காங். விமர்சனத்தை அடுத்து விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவு அட்டையில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு நடத்தும் ஆணைய வலைதள பக்கத்தில் இருந்து தேர்வு எழுத நுழைவு அட்டை பதிவிறக்கம் செய்தனர். அப்படி பதிவிறக்க செய்யப்பட்ட விண்ணப்பதாரர் ஒருவரின் நுழைவு அட்டையில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்தது.

இதனை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது., இந்த பிரச்சனை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் விண்ணப்பதாரரின் கணவர் தனது நண்பரிடம் சொல்லி விண்ணப்பித்துள்ளார். அந்த நண்பரே தவறான புகைப்படத்தை வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: