இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் நவ.12 - 16 தேதிகளுக்கு இடையே விண்ணில் செலுத்த முடிவு

ஹைதராபாத்: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் இம்மாத மத்தியில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் பெரும் முயற்சிக்கு பிறகு ராக்கெட் ஒன்றை வடிவமைத்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட சோதனைகளின் அடிப்படையில் அந்நிறுவனம் தயாரித்திருக்கும் நவீன ராக்கெட்டிற்கு விக்ரம்-எஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த ராக்கெட் வருகின்ற 12-ம் தேதி முதல் 16-ம் தேதிக்குள் விண்ணில் செலுத்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விக்ரம்-எஸ் விண்ணுக்கு ஏவப்பட உள்ளது. சாதகமான வானிலையில் அடிப்படையில் ராக்கெட் ஏவுதலுக்கான சரியான தேதியை அதிகாரிகள் தேர்வு செய்வார்கள் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தெரிவித்திருக்கிறது. வணிக நோக்கத்தில் இந்த ராக்கெட் மூலமாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக விண்வெளிக்கு ராக்கெட் ஏவிய முதலாவது இந்திய தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் பெறுகிறது.     

Related Stories: