×

7 மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம்: இந்தியன் புக் ஆப் ரெக்காட்ஸில் இடம்பிடித்தார் சிந்துமோனிகா

கோவை: கோவையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் கடந்த 7 மாதங்கலில் 1400 பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்துள்ளார். தாய்மையின் மேன்மையை உணர்த்திய அவர் India Book of Records-ல் இடம்பெற்றுள்ளார்.

குழந்தையின் முதல் உணவாக அனைவராலும் கருதப்படுவது தாய்ப்பால். குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தாய்ப்பால் முக்கியமானது என்பது யாராலும் மறுக்க முடியாத கருத்தாகும். ஆனால் உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல தாய்மார்களுக்கு தாய்ப்பால் போதுமான அளவு சுரப்பதில்லை. மேலும் பிரசவத்தின் போது தாய் இறந்துவிட்டால் அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை. அந்த குழந்தைகளுக்காக கடந்த 2014ம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி அறிமுகப்படுத்தப்பது. நாடு முழுவதும் மொத்தம் 70 தாய்ப்பால் வங்கிகள் இருக்கும் நிலையில் அவற்றில் சரி பாதிக்கு மேல் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.

இந்த வங்கியில் அமிர்தம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தாய்ப்பால் தானம் செய்து வருகிறார் கோவையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிந்துமோனிகா. 29 வயதான இவர் கடந்த 2021 ஜூலை மாதம் முதல் 2022 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 1400 குழந்தைகளுக்கு 42 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார். இதில் தமிழ்நாடு அரசின் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைகளுக்கு சிந்து அளித்த தாய்ப்பால் அளவு 42,000 மில்லி லிட்டர் ஆகும். அதாவது 42 லிட்டர் இதன் காரணமாக Asia Book of Records மற்றும் India Book of Records சாதனை புத்தகத்தில் அவர் இடம்பிடித்துள்ளார்.

சிந்து மோனிகா போல தாய்ப்பால் செய்ய விரும்பும் இளம்தாய்களின் மூலம் கோவை மற்றும் அதை சுற்றியுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தாய்ப்பாலை கொண்டு சேர்த்து வரும் தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ரூபா செல்வநாயகி தாய்ப்பால் இன்றி இறக்கும் குழந்தைகளின் விகிதத்தில் உலக அளவில் இந்தியா 2வது இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். தானத்தில் சிறந்த தானம் தாய்ப்பால் என்பார்கள், அது கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கு தாக்கம் தீர்த்து உயர்ந்திருக்கும் சிந்து மோனிகாவை பார்த்து பல தாய்மார்களும் முன்வர வேண்டும்.


Tags : Sindumonica , Donating breast milk to 1400 babies in 7 months: Sindhumonica enters Indian Book of Records
× RELATED பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..!!