பண மதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதார இனப்படுகொலை: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு மோடி அரசின் 6வது நினைவு நாள். இது பொருளாதார இனப்படுகொலை’ என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து செய்துள்ளன. நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கடந்த 2016ம் ஆண்டு நவம்பவர் 8ம் தேதி வாபஸ் பெறுவதாக (பணமதிப்பிழப்பு) பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்கவும், மக்களிடம் பணப் புழக்கத்தை குறைத்து, வங்கி பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த பணமதிப்பிழப்பு செயல்படுவத்துவதாக அவர் அறிவித்தார். ஆனால், இந்த நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை.

கருப்பு பணம் மீட்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்த நிலையில், செல்லாத நோட்டுகள் 97% ரிசர்வ் வங்கிக்கு வந்து சேர்ந்துவிட்டது. இதனால், ஒன்றிய அரசின் முக்கிய குறிக்கோள் நிறைவேறாமல், பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், பணமதிப்பிழப்பு பொருளாதாரத்தை அதிக முறைப்படுத்த உதவியது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், 6 ஆண்டுகள் முடிந்தும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் செயல் திறன் குறித்து இதுவரை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.  பணமதிப்பிழப்புக்கு பின் மக்களிடம் பண புழக்கம் குறைந்ததாக கூறப்பட்டு இருந்தது.

ஆனால், பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 6 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.30.88 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது, பணமதிப்பிழப்புக்கு முன்பாக 2016, நவம்பர் 4ம் தேதி புழக்கத்தில் இருந்த பணத்தை (ரூ.17.7 லட்சம் கோடி) விட 71.84 சதவீதம் அதிகமாகும்.இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் 6 ஆண்டுகள் முடிந்தது. இதை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங். எம்பி, கட்சி செய்தித் தொடர்பாளர்):  6 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பொருளாதார இனப்படுகொலையாக மாறிய நடவடிக்கைதான் பணமதிப்பிழப்பு. இது, ஒரு குற்றச் செயல்.சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச் செயலாளர்): பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நல்ல மதிநுட்பம்,  அறிவுரைகள், ஆதாரங்களுக்கு எதிரான குற்றச்செயல். ஆனால், இதை பற்றி மோடி அரசு தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறது. இது, மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்திய பொருளாதார படுெகாலையின் 6வது நினைவுநாள். மோடி அரசின் அனைத்து போலி வாக்குறுதிகளிலும் மிகவும் மோசமானது. இந்த துன்பங்கள் எல்லாம் இன்னும் 50 நாட்கள்தான்.

பினோய் விஸ்வம் (இந்திய கம்யூ,ல மூத்த தலைவர்): 6 ஆண்டுகளுக்கு முன்பு அதிக  மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ரத்து செய்யும் நடவடிக்கை பெரும் ஆரவாரத்துடன்  எடுக்கப்பட்டது. கருப்பு பணம், பயங்கரவாதத்தை ஒழிப்பதாக வாக்குறுதி  அளிக்கப்பட்டது. இது நாட்டுக்கு எப்படி உதவியது என்பதை ஆய்வு செய்ய  வேண்டிய நேரம் வந்து விட்டது. பணமதிப்பு நீக்கம் குறித்த வெள்ளை அறிக்கையை மோடி  வெளியிட வேண்டும்.

Related Stories: