சந்திர கிரகணத்தில் பிரியாணி விருந்து: மாட்டு சாணம் வீசி அடிதடி

புவனேஸ்வர்: சந்திர கிரகணத்தின்போது, மூடநம்பிக்கை தகர்க்க நேற்று  ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் பகுத்தறிவாளர்கள் சிலர், சமூக விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். லோகியா அகாடமி வளாகத்தில் நடந்த விருந்தில் பிரியாணி பரிமாறப்பட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். விருந்து நடக்கும் இடத்திற்குள் நுழைந்த அவர்கள், பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். விருந்தில் கலந்து கொண்டவர்கள் மீது மாட்டு சாணத்தை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக, இருதரப்பையும் சேர்ந்த 12 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: