×

அரசாணை 115ஐ ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் ேதர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதன் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு அரசு வேலைவாய்ப்புகளில் கடைபிடிக்கப்படுகிறது. தமிழக அரசு, இனி அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்காக, தமிழக அரசின் மனித வள மேலாண்மை துறை அரசாணை எண். 115 என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையின்படி மனித வள சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பரூக்கி தலைமையிலான இந்த குழு ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ பெரும்பாலான அரசு ஊழியர் அமைப்புகளும் எதிர்க்கின்றன. படித்த இளைஞர்களின் வருங்காலத்தை பாழாக்கும் இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Govt ,Edabadi Palanisamy , Repeal of Ordinance 115: Edappadi Palaniswami insists
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...