தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய ஆணையம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் கரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ்நாட்டில் இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்வதற்கான ஒரு ஆணையத்தை அமைத்து அதன் பரிந்துரைகள் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களை, இச்சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அமலாக்கும் போது தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

Related Stories: