×

பண மோசடி மற்றும் பாதிக்கப்பட்டதாக பப்ஜி மதன் மீது இமெயிலில் 100 பேர் புகார்: மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல்

சென்னை: இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விபிஎன் சர்வர் மூலம் விளையாடிய சேலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மதன் என்பவர், அதை தனது யூடியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து வந்தார். இந்நிலையில், இவர் தனது யூடியூப் சேனலில் விளையாடும்போது பெண்களை குறிப்பாக சிறுவர், சிறுமிகளை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இவர் சிறுவர் சிறுமிகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்கள் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் யூடியூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையறிந்து தலைமறைவான அவரை, தருமபுரியில் உள்ள லாட்ஜில் வைத்து தனிப்படை போலீசார் 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர். முன்னதாக மதனுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிருத்திகாவிடம் நடத்திய விசாரணையில், கிருத்திகா வங்கி கணக்கில் ரூ.4 கோடி இருப்பதும் தெரியவந்தது.இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதன் மற்றும் அவரின் மனைவி கிருத்திகா ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் பப்ஜி மதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களும், பணத்தை ஏமார்ந்தவர்களும் DCPCCB1@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என புகாரின் பேரில் அவரிடம் இழந்த பணத்தை மீட்டுத் தருவோம் என்போலீசார் அறிவிப்பு வெளியிடப்பட்டனர்.அதன்படி, தற்போது வரை மின்னஞ்சலில் 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதில் 40 சதவீத புகார்கள் பணம் இழந்தது தொடர்பாகவும், 60 சதவீத புகார்கள் மதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும் பெறப்பட்டுள்ளது. புகார் அளிப்பவர்கள் தங்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை தெரிவித்து, பின் எந்த தேதியில் எவ்வளவு பணம் எதன் மூலம் செலுத்தியுள்ளார்கள் என்ற விவரத்தை தேவையான ஆதாரங்களுடன் முறையாக புகாரை அளிக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.  …

The post பண மோசடி மற்றும் பாதிக்கப்பட்டதாக பப்ஜி மதன் மீது இமெயிலில் 100 பேர் புகார்: மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Papji Madhan ,Central Offence Police ,Chennai ,Madan ,Salem ,India ,Central Crime Police ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!