குடைமிளகாய் பொரியல்

செய்முறை

முதலில் குடைமிளகாயை நன்கு கழுவிக் கொள்ளவும். பின் அதனை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். அதனையும் சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கழுவி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய், கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிதம் செய்யவும்.

பின் அதில் சதுரத் துண்டுகளாக வெட்டிய சின்ன வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வெந்த நிலையில் சதுரத் துண்டுகளாக வெட்டியுள்ள குடைமிளகாயினைச் சேர்க்கவும்.  5 நிமிடங்கள் வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும். சுவையான மணமான குடைமிளகாய் பொரியல் தயார்.

Related Stories:

>