×

நாட்டிலேயே அதிக காற்று மாசு பீகார் முதலிடம்

புதுடெல்லி: நாட்டிலேயே அதிக காற்றுமாசு பீகார் மாநிலத்தில் உள்ளதாக ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம்  தெரிவித்துள்ளது. இது குறித்து அது வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நேற்று முன்தினம் நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் பீகாரின் கதிஹார் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. 7ம் தேதி நிலவரப்படி மொத்தம் 163 நகரங்களில் அதிகபட்சமாக இங்கு காற்றின் தரக்குறியீடு 360 ஆக இருந்தது. டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 354 ஆக பதிவாகி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நொய்டா 324, காசியாபாத்தில் 304 ஆக உள்ளது.

இதேபோல் பீகாரின் பெகுசாராய், பல்லாப்கர், பரிதாபாத், கைதால் மற்றும் அரியானாவின் குருகிராம், மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் ஆகியவையும் கடந்த திங்களன்று மிகவும் மாசுபட்ட நகரங்களாக இருந்தது. இந்த தரவுகள் நாட்டிற்கு ஒரு எச்சரிக்கை அழைப்பாக கருதப்படுகிறது. நேற்று பஞ்சாபில் 3,634 இடங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்பட்டு உள்ளதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது, இந்த ஆண்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.

Tags : Bihar , Bihar has the most air pollution in the country
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!