×

வேகப் பந்துவீச்சாளர்களுக்காக விமானத்தில் கோலி, ரோகித், ராகுல் டிராவிட் செய்த நெகிழ்ச்சி செயல்: ரசிகர்கள் இடையே பாராட்டு

அடிலெய்டு: மெல்போர்னில் இருந்து அரையிறுதி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி விமானத்தில் அடிலெய்டு வந்தனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரை இறுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து இந்திய அணி அடிலெய்டில் வரும் நவம்பர் 10-ம் தேதியன்று நடைபெறும் 2-வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதனால் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்த்தை மெல்போர்னில் விளையாடி விட்டு, அரையிறுதி போட்டியில் பங்கேற்பதற்காக விமானத்தில் அடிலெய்டு வந்தனர். ஐசிசியின் விதிப்படி ஒவ்வொரு அணியிலிருந்து 4 வீரர்களுக்கு மட்டுமே நவீன வசிதளை உடைய வணிக வகுப்பு இருக்கைகள் (பிசினஸ் கிளாஸ் சீட்) வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியில் கோலி, ரோகித், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பிஸ்னஸ் விகுப்பு இருக்கைகள் வழங்கப்பட்டது.

ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சரியான ஓய்வு தேவை என்பதால், கோலி, ரோகித், டிராவிட் ஆகியோர் தங்களது பிஸ்னஸ் விகுப்பு இருக்கையை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளனர். மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு விமான பயண நேரம் 1 மணி 20 நிமிடங்கள் ஆகும். இந்த பயண நேரத்தில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் தங்களின் கால் மற்றும் முதுகில் வலியை எதிர்கொள்ள நேரிடலாம்.

இதனால், இந்திய வேகப் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பிசினஸ் கிளாஸ் சீட்களை கொடுத்துள்ளனர். அதனால் அவர்களுக்கு போட்டிக்கு முன்பு சரியான ஓய்வு கிடைக்கும்.

இது தொடர்பாக பேசிய இந்திய அணியின் துணை ஊழியர் ஒருவர் பேசுகையில், போட்டிக்கு முன், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஓய்வு வேண்டும். மேலும், அவர்கள் கால்களை நீட்ட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம் என கூறினார். டிராவிட், ரோகித் சர்மா மற்றும் கோலியின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.


Tags : Kohli ,Rohit ,Rahul Dravid , Kohli, Rohit, Rahul Dravid's resilience in flight for fast bowlers: Praise from fans
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...