ஆர்.பி.ஐ. அனுமதியின்றி வங்கி நடத்தியதாக 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: ஆர்.பி.ஐ. அனுமதியின்றி வங்கி நடத்தியதாக 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மதுரை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர் உள்ளிட்ட இடங்களில் போலியாக வங்கி தொடங்கியுள்ளனர். 3 ஆயிரம் பேர் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்; இதுவரை ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓராண்டாக செயல்பட்டு வந்த போலி வங்கியில் இருந்து ரூ.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று சங்கர் ஜிவால் கூறினார்.

Related Stories: