×

கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான தொழில் அல்ல: ஆந்திர அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான ஒரு தொழில் அல்ல என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஆந்திர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஆந்திராவில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டண தொகையை ஆண்டுக்கு ரூ.24 லட்சமாக  அம்மாநில அரசு உயர்த்தியது. இதன்படி, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி ஆந்திர அரசு வெளியிட்ட அரசாணையில், 2017-2020-ம் ஆண்டுக்கான படிப்பு கட்டண தொகையை ஆண்டுக்கு ரூ.24 லட்சம் என உயர்த்தி அறிவித்தது.

இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆந்திர அரசு அறிவித்த அரசாணையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை ஏற்று கொண்டு விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சுதான்ஷூ தூலியா ஆகியோர் கொண்ட அமர்வு, கட்டண தொகையானது முன்பு நிர்ணயித்த தொகையை விட 7 மடங்கு அதிகம் என்றும் எந்த வகையிலும் நியாயமற்றது என்று கூறியதுடன், உயர்நீதிமன்ற உத்தரவைஉறுதி செய்தது. மேலும் கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான ஒரு தொழில் அல்ல கருத்து தெரிவித்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை என்றும் கூறினார்.


Tags : Supreme Court ,Andhra Pradesh , Education is not a profit-making profession, says Andhra Pradesh government appeal case, Supreme Court opined
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...