×

பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலும் தோல்வியடைந்த திட்டம்: லட்சக்கணக்கான சிறு,குறு ஆலைகள் மூடப்பட்டன

டெல்லி: பஞ்சாப் மாநிலத்தைச்ச் சேர்ந்த சுப்தேவ் தன்மகள் திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன் திருமணம் செலவுக்கு பணம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தைச் சேர்ந்த 75 வயது முதியவரான லக்ஷ்சுமி நாராயணா வங்கியில் வரிசையில் நின்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்து மரணம். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பல்கேலோதி என்ற விவசாயி உரம் வாங்க கையில் பணம் இல்லாததால் பூச்சிமருந்தைக் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம்தம்பதியிடம் கையில் பணம் இல்லாததால் அவர்களது 18 மாதம் குழந்தை சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்தது. 2016 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்களுக்கு காரணம் அவர்களிடம் பணம் இல்லாதது அல்ல, அவர்கள் வைத்திருந்த பணம் செல்லாமல் போனதே ஆகும். அதுவரை புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என 2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட ஒற்றை அறிக்கை அறிவிப்பு  கோடிக்கணக்கான மக்கள் கையில் இருந்த பணத்தை வெற்று காகிதங்களாக மாற்றியது.

பழைய ரூ.500, 1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிக்கப்பட்டாலும் அதற்கான ஏற்பாடுகள் முறையாக செய்யபடாததால் வங்கிகள் ஏடிஎம் வாசல்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ்வாறு காத்திருந்த பலர் மயங்கி விழுந்தும் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்தனர். உயிரிழப்பு மட்டுமல்ல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கும் காரணமான பனமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆண்டுகள் உருண்டோடினாலும் பணமதிப்பிழப்பின் பாதிப்புகள் ஒய்ந்துவிட்டது என்றால் இல்லை என்பது பெரும்பாலோரின் பதிலாக உள்ளது.

பணமதிப்பிழப்பு பாதிப்பு தொடர்ந்தாலும் அது அமல்படுத்தியதன் நோக்கம் நிறைவேறியதா என்றால் அதுவும் இல்லை என்றே புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நவம்பர் 8 2016 இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உறையாற்றிய பிரதமர் மோடி அன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து ரூ.500,1000 தாள்கள் செல்லாது என அறிவித்தார். அவற்றுக்கு பதிலாக புதிய ரூ.100,200 மற்றும் 2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பணமதிப்பு நீக்கத்தை அறிவித்த பிரதமர் மோடி முன்று நோக்கங்களை இந்தியா அதன் மூலம் அடையும் என்று கூறினார்.

அவை கருப்பு பணத்தை ஒழிப்பது, கள்ள பணத்தை ஒழிப்பது, மூன்றாவதாக ஊழலை ஒழிப்பது. இந்த மூன்று நோக்கங்களுக்காக நாட்டு மக்கள் தற்காலிகமாக சில இன்னல்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி கூறிய மூன்று நோக்கங்களும் தோல்வியில் முடிந்து விட்டதாக பணமதிப்பு நீக்கம் அறிவித்த சில வாரங்களிலேயே விமர்சனங்கள் எழுந்தன. பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்கு பிறகே பலருக்கு ரூ.2000 தாள்கள் கிடைத்த நிலையில் டெல்லி, முமபை நகரங்களில் தொழிலதிபர் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பல கோடி பறிமுதல் செய்யப்பட்டது. நிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் சரக்குகளை வாங்க முடியாமலும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்க முடியாமலும் தொழிலாளர்களை முற்றிலும் கைவிட்டனர். 6 ஆண்டுகளுக்கும் பிறகும் இன்றும் தொழில்களை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags : Demonetisation was a complete failure: lakhs of small and micro factories were shut down
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!