அரியலூரில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்

அரியலூர் : அரியலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அரியலூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.கடந்த வாரம் தொடங்கிய இந்த முகாம் மூலம், அப்பள்ளி வளாகம், கோதண்டராமசாமி கோயில் வளாகம், சிவன் கோயில், தூய தெரசாள் தொடக்கப்பள்ளி ஆகிய வளாகங்களை தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து, பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இம்முகாமினை பள்ளி தலைமையாசிரியை இசபெல்லாமேரி தொடங்கி வைத்தார். 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தார். மாவட்ட தொடர்பு அலுவலர் செல்லபாண்டி மாணவிகளின் களப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அரசு மருத்துவக்கல்லூரி உதவி மருத்துவர் முத்துக்குமார் யோகா, இயற்கை மருத்துவம் குறித்தும், வழக்கறிஞர் அல்லி, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பள்ளிக்கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி, சுற்றுச்சூழல் குறித்தும் மாணவிகளிடம் எடுத்துரைத்தனர். இம்முகாமுக்கான ஏற்பாடுகளை ஆசிரியை டோமினிக் சாவியோ செய்திருந்தார்.

Related Stories: