கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் ஆகாச தீபம் ஏற்றம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீகாளஹஸ்தி : கார்த்திகை மாத  பவுர்ணமியையொட்டி, ஸ்ரீகாளஹஸ்தியில் கோயிலில் ஆகாச தீபம் ஏற்பட்டது. திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை மாத  பவுர்ணமியையொட்டி, நேற்று அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெண் பக்தர்கள் கோயில் வளாகத்தில் கார்த்திகை தீபங்களை ஏற்ற ஒதுக்கப்பட்ட 4 பகுதிகளிலும் ஏராளமானோர் தீபங்களை ஏற்றி வழிபட்டனர். மேலும், ஊஞ்சல் மண்டபம் அருகில் ஆகாச தீபத்தை ஏற்றப்பட்டு கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு கலந்து கொண்டு வழிபட்டனர். வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் தீபங்களை ஏற்றி  வழிபட்டனர்.

பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்யப்பட்டது. இலவசமாக பிரசாதங்களை வழங்கப்பட்டது. இதேபோல், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மற்றும் கோயிலில் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ஊஞ்சல் சேவை மற்றும் உச்சமூர்த்திகளை  மாடவீதியில் உலா வந்தனர்.

வரசித்தி விநாயகர் கோயிலின் துணை கோயிலான ஸ்ரீமணிகண்டேஸ்வர சுவாமி கோயிலிலும் கார்த்திகை பவுர்ணமியையொட்டி (நெல்லிக்காய்)  மரத்தின் அடியில் பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலையில் (ஜுவாலா தோரணம் )மற்றும் தீப அலங்காரம் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ சுவாமி கோயிலிலும் கார்த்திகை பவுர்ணமியையொட்டி சத்யநாராயண சுவாமி விரத பூஜை நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: