×

கடமலை மயிலை ஒன்றியத்தில் வேளாண் துறை அதிகாரிகள் துவரை சாகுபடி குறித்து ஆய்வு

வருசநாடு : கடமலை மயிலை ஒன்றியத்தில் துவரை சாகுபடி பற்றி வேளாண்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.கடமலை மயிலை ஒன்றியத்தில் மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், எட்டப்பராஜபுரம், வேலாயுதபுரம், அண்ணாநகர், ஆத்தங்கரைபட்டி, அய்யனார்புரம், பாலூத்து,தங்கம்மாள்புரம், வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடமலைக்குண்டு வேளாண்மைத்துறை அதிகாரிகள் துவரை விளைச்சல் பற்றி ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் எவ்வாறு உள்ளது? விவசாயிகளுக்கு ஏற்றதாக உள்ளதா? அல்லது விளைச்சல் குறைவாக உள்ளதா? என பல கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் ஒவ்வொரு மானாவாரி நிலங்கள் அடிப்படையில் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியின் போது கடமலைக்குண்டு வேளாண்மைத் துறை அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்வேளாண் துறையினர் கூறுகையில், விவசாய நிலங்களுக்குச் சென்று துவரை சாகுபடியில் பூச்சி தாக்குதல் ஏதும் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை விவசாயிகளிடம் கேட்டு வருகிறோம். அவரை சாகுபடி பற்றி பட்டியல் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

Tags : Kadamala Peacock Union , Varusanadu: Agricultural department is conducting a study on the cultivation of dura in Kadamala Peacock Union.In Kadamala Peacock Union
× RELATED கடமலை மயிலை ஒன்றியத்தில் சித்த...