×

திருமுருகன்பூண்டி அருகே மழைநீரால் நிரம்பிய ராசாத்தா கோயில் குட்டை

திருப்பூர் : திருமுருகன்பூண்டி அருகே மழைநீரால் ராக்கியாபாளையம் ராசாத்தா கோயில் குட்டை நிரம்பி உள்ளது. திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கியாபாளையம் ராசாதாத்தா கோயில் அருகே வருவாய்துறைக்கு சொந்தமான குட்டை உள்ளது. இந்த குட்டையின் பரப்பளவு 4.82 ஏக்கராகும். கடந்த 2 மாதமாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை பெய்ததன் பயனாக ராசாத்தா கோயில்குட்டை பாதி அளவு மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

மேலும் குட்டையை சுற்றி பச்சை பசேசென மரங்கள் பசுமையாக அமைந்துள்ளது. ஆனால் குட்டையின் உள்புறமும், வெளிபுறமும் அதிக அளவில் சீமக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பெரிய அளவிலான குளம், குட்டைகள் இல்லாத நிலையில் 4 ஏக்கர் பரப்பளவிலான குட்டையை பராமரித்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய திட்டமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: நடைபாதை அமைக்க முடிவு திருப்பூரில் நொய்யல், நல்லாறு ஆகிய 2 ஆறுகள் இருந்தாலும் அதில் பெரும்பாலான நேரங்களில் கழிவுநீரே பாய்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஆண்டிபாளையம் குளம் முக்கிய நீர்நிலையாக உள்ளது. அந்த குளம் தூர்வாரப்பட்டு, குளத்தின் அருகே பூங்கா அமைத்து பொழுதுபோக்கு அம்சமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ராக்கியாபாளையத்தில் ராசாத்தா கோயில் அருகே உள்ள குட்டையை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும்.

அந்த குட்டையை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ள சீமக்கருவேல மரங்களை உடடினயாக அகற்ற வேண்டும். அதேபோல் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டையில் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குட்டையை சுற்றி நடைபாதை, பூங்கா உள்ளிட்ட பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Rasatha temple ,Tirumuruganpoondi , Tirupur: Rakiyapalayam Rasatha temple pond is filled with rain water near Tirumuruganpoondi. Thirumuruganpoondi next to Tirupur
× RELATED நீலகிரி தொகுதியில் மீண்டும்...