×

மண்டே பெட்டிஷன் வாங்க வலியுறுத்தி நரிக்குறவர் வேடமிட்டு விவசாயி நூதன ஆர்ப்பாட்டம்-செய்யாறில் பரபரப்பு

செய்யாறு :  மண்டே பெட்டிஷன் வாங்க வலியுறுத்தி செய்யாறில் நரிக்குறவர் வேடமிட்டு விவசாயி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.கடந்த ஒன்றரை ஆண்டாக வட்டாட்சியர், சார் ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனு பெறுவது நிறுத்தப்பட்ட நிலையில், அதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று செய்யாறில் விவசாயி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் எதிரே கட்சி சார்பற்ற விவசாய சங்க பிரதிநிதி வாக்கடை புருஷோத்தமன் நரிக்குறவர் வேடமிட்டு பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு சென்று தரும் மனுக்களை நரிக்குறவர் டப்பாவில் போடுங்கள். மனுக்களை எடுத்து சென்று சிஎம் தனிப்பிரிவுக்கு அனுப்புகிறேன் என கூறி நூதன ஆர்ப்பாட்டம் செய்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சார் ஆட்சியர் மனு வாங்க ஏற்பாடு செய்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

 தொடர்ந்து, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துபட்டு தாலுகா பொதுமக்களிடம் சார் ஆட்சியர் மனு பெற்று தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
சார் ஆட்சியர் அலுவலகத்தில் மண்டே பெட்டிஷன் பெறுவது தொடர்ந்தால் கலெக்டர் அலுவலகம் செல்ல பயண செலவு, வேலை இழப்பு, மன உளைச்சல் குறையும் என்கிற நம்பிக்கை
 ஏற்பட்டது.


Tags : Nudhan , Seyyar: A farmer disguised as a jackal took part in a demonstration in Seyyar demanding the purchase of a Monday petition.
× RELATED கட்சி மாறி பாஜகவில்...