×

இங்கிலாந்துடன் அரையிறுதி போட்டி: தினேஷ்கார்த்திக்-ரிஷப் பன்ட்... அஸ்வின்-சாஹல்... யாருக்கு இடம்? டிராவிட் பேட்டி

அடிலெய்டு: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. குரூப் 2ல் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த இந்திய அணி நாளை மறுதினம் (10ம்தேதி) அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்த விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்தே தினேஷ் கார்த்திக் - ரிஷப் பன்ட் ஆகியோரிடையே போட்டி இருந்து வருகிறது.

இதில் தினேஷ் கார்த்திக் தான் ப்ளேயிங் 11ல் இடம்பிடித்தார். ஆனால் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. இதனையடுத்து ரிஷப் பன்ட்-க்கு கடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சொற்ப ரன்களில் அவர் அவுட் ஆனார். கிடைத்த வாய்ப்பிலும் சொதப்பியதால் அடுத்து வரும் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மற்றொருபுறம் தினேஷ் கார்த்திக்கிற்கு முன்கூட்டியே களமிறங்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ரோகித் என்ன முடிவு எடுப்பார் என்ற குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் கூறுகையில், ``ஒரு வீரரின் ஃபார்மை ஒரே ஒரு போட்டியை வைத்து எடை போடமாட்டோம். எதிரணியில் எதுபோன்ற பவுலர்கள் இருக்கிறார்களோ, அதற்கேற்ற வகையில் தான் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வோம். அதில் இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. நாங்கள் இன்னும் ரிஷப் பன்ட் மீது நம்பிக்கை இழக்கவில்லை. 15 வீரர்கள் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அனைத்து வீரர்களையும் எப்போது வேண்டுமானாலும் அழைப்போம் என்று தான் கூறி வைத்துள்ளோம். ரிஷப் பன்ட் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஜிம்பாப்வே போட்டியில் இடதுகை ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய வேண்டும் என்றுதான் அவருக்கு பணி கொடுத்தோம்.

அவரும் அதை முயற்சித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது தவறானது. ரிஷப் பன்ட்-ஐ மனதில் வைத்துள்ளோம். அடுத்து வரும் போட்டிகளில் அவரை பயன்படுத்தலாம். இதுபோல் ஸ்பின்னர்களில் அஸ்வினா, சாஹலா என்றால், நாங்கள் மீண்டும் பிட்ச்-ஐ சென்று பார்த்தால்தான் முடிவெடுக்க முடியும். அங்கு கடைசியாக நடந்த பாக் - வங்கதேச போட்டியை பார்த்தேன். அதில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். நாங்கள் அடிலெய்டில் ஆடியபோது சுத்தமாக பந்து சுழலவில்லை. தற்போது சுழல்கிறது. எனவே போட்டிக்கு முன்பு எப்படி களம் இருக்கிறதோ அதற்கேற்ற வகையில் தான் சாஹலா? அஸ்வினா? என்பது பற்றி முடிவெடுக்க முடியும்’’ என்றார்.

Tags : England ,Dineshkarthik ,Rishabh Pant ,Ashwin ,Chahal ,Dravid , Semi-final match with England: Dineshkarthik-Rishabh Pant... Ashwin-Chahal... Who has a place? Interview with Dravid
× RELATED ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல்