ஓசூர் அருகே 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை

ஓசூர்: ஓசூர் அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓசூர் கோட்டத்தின் அஞ்செட்டி, ஜவளகிரி, ஊரிகம் சரகங்களை உள்ளடக்கிய 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் என்று அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் தமிழ்நாட்டின் 17-வது வனவிலங்கு சரணாலயமாகும்.

தமிழ்நாட்டின் 17-வது வனவிலங்கு சரணாலயமாக காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்த சரணாலயமானது அமைய உள்ளது. முன்னதாக இதற்கான கோரிக்கையானது முன்வைக்கப்பட்டது.

காவிரி நீர்ப்பிடிப்பு இருக்க கூடிய பகுதியில் cauvery north wildlife sanctuary அமைப்பது தொடர்பான அறிவிப்பானது வெளியிடப்பட்டிருந்தது.இதன் அடிப்படியில் தற்போது 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பரவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் cauvery south wildlife sanctuary அமைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் பல்வேறு விதமான உயிரினங்கள் உள்ளது. குறிப்பாக யானைகள் உள்ளிட்ட 35 விலங்கினங்கள் உள்ளது. அதே போல் 238 பறவையினங்கள் உள்ளது. பல்வேறு விதமான உயிரினங்கள் இருப்பதன் காரணமாக அதனை பாதுகாக்கும் பொருட்டு இதனை காவிரி படுக்கையின் சரணாலயமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

அதன் அடிப்படியில், காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை அமைப்பதற்கான ஒப்புதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அங்குள்ள உயிரினங்கள் பாதுக்காக்கப்படுவதோடு, மேலும் அதனை வளர்ப்பதற்கான ஒருவாய்ப்பாக அமையும் என்ற அடிப்படையில் தான் இந்த சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: