2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் டிடிவி கூட்டணி?.. ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

திருச்சி: பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்; அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுக தொண்டர்களை யாராலும் பிளவுப்படுத்தி பார்க்க முடியாது. அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுகவின் ஒற்றுமையை பாஜக சீர்குலைக்கவில்லை. அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நிற்கின்றனர். தலைமையில் பிரச்சனை இருப்பது போல மாயத்தோற்றம் நிலவுகிறது.

அதிமுகவில் சில சில பிரச்சனைகள் வரும் அது சரியாகிவிடும். அதிமுக கூட்டணி அமைத்தால் சேரத் தயார் என்ற டிடிவி தினகரன் கருத்தை வரவேற்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனை சந்திப்போம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தயார். திமுகவும், அதிமுகவும் அண்ணன், தம்பி இயக்கம் தான் ஆனால் நாங்கள் மாறுபட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் போது வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்திப்பேம் இவ்வாறு கூறினார்.

Related Stories: