பொன்னேரி அருகே லட்சுமி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை; மர்மநபர்கள் கைவரிசை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கத்தில் லட்சுமி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டு பழமை வாய்ந்த கிராம தேவதையான லட்சுமி அம்மன் ஆலயத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்றது. கடந்த ஓராண்டாக காணிக்கை எண்ணப்படாததால் உண்டியலில் ரூ.50,000 வரை இருந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: