×

முள்ளங்கி பூரி

செய்முறை:

முள்ளங்கியைக் கழுவி, தோல் சீவி, துருவிக் கொள்ளவும். நெய்யைக் காயவைத்து,முள்ளங்கியைப் போட்டு வதக்கவும். தண்ணீர் வற்றி, வதங்கியதும், மிளகாய்தூள் முதல் கரம்மசாலா வரை அனைத்துத் தூள்களையும் கலந்து, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இதுதான்ஸ்டஃப் செய்ய வேண்டிய மசாலா.கோதுமை மாவை சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய செப்பு போல செய்து, அதன் நடுவேஒரு டீஸ்பூன் முள்ளங்கி மசாலாவை வைத்து, பூரியாக தேய்க்கவும். காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸ் இதற்கேற்ற ஜோடி.

Tags : Radish Puri ,
× RELATED கறிவேப்பிலையின் மகத்துவம்