×

குழந்தைகளை பார்க்க தடை விதித்ததால் மனைவியின் 2வது கணவனை அடித்து கொன்ற வாலிபர்: பெசன்ட் நகரில் பரபரப்பு

வேளச்சேரி: முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகளை பார்க்க தடை விதித்த 2வது கணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெசன்ட் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மனைவியிடம் விசாரித்து வருகின்றனர். தப்பிய முதல் கணவரை தேடி வருகின்றனர். சென்னை புதுப்பேட்டை பகுதியில் சாலையோரமாக வசிப்பவர் பாஷா (எ) சையது முகமது பாஷா (26). இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணான அமுதா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், குடும்ப தகராறில் பாஷா குடித்துவிட்டு வந்து அமுதாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால், விரக்தியடைந்த அமுதா, கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் பெசன்ட்நகர், ஓடைக்குப்பத்தில் உள்ள தனது சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர், ஓராண்டுக்கு முன், தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்கரை முகமது (32) என்பவரை அமுதா 2வது திருமணம் செய்துகொண்டார். அப்போது, முதல் கணவர் மூலம் பிறந்த 2 குழந்தைகளையும் தனது சித்தியிடம் விட்டுவிட்டு, சக்கரை முகமது வீட்டிலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

சித்தி வீட்டில் உள்ள தனது 2 குழந்தைகளையும் அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார். இது 2வது கணவர் சக்கரை முகமதுவுக்கு பிடிக்காததால், முதல் கணவரை விட்டு பிரிந்த பிறகு, அவருக்கு பிறந்த குழந்தைகளை பார்க்க ஏன் போகிறாய் எனக்கேட்டு, மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அதை மீறி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தனது   2 குழந்தைகளை பார்க்க பெசன்ட்நகர், ஓடைக்குப்பத்துக்கு அமுதா சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த ஆட்டோ டிரைவர் சக்கரை முகமது, என் பேச்சை மீறி, முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகளை பார்க்க செல்கிறாயா, எனக்கேட்டு, அமுதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு அவர், ஆமாம் பார்க்க செல்வேன், என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அமுதாவை சரமாரியாக அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல், முதல் கணவர் பாஷாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நேற்று முன்தினம் சக்கரை முகமதுவை தேடியபோது, அவர் பெசன்ட் நகர் அருகேயுள்ள  ஸ்கேட்டிங் மைதானத்தில் இருப்பது தெரிந்தது. அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சக்கரை முகமதுவை கற்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் அங்கேயே மயங்கி சரிந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு  சக்கரை முகமது பரிதாபமாக பலியானார். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முதல் கணவர் பாஷாவை தேடி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக அமுதாவிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Tags : Volleyber ,Besant City , Child, forbidden to visit, wife, 2nd husband, beaten to death, teenager, riot in Besant Nagar
× RELATED காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் பள்ளி...