மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி தரம் தலைமை செயலர் ஆய்வு

தண்டையார்பேட்டை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி  வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.  அதன்படி, அரசுப் பள்ளிகளில்  1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும்  திட்டத்தை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அர்தூன் சாலையில் உள்ள உருது தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தரம் குறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து, மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவினை அவரும் சாப்பிட்டு உணவின் தரத்தினை ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, கல்வி துணை ஆணையர் சினேகா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், திமுக கிழக்கு பகுதி செயலாளர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பலர்  உடனிருந்தனர்.

Related Stories: