50 ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கு ஆவின் பாலகம் அமைக்க ரூ.45 லட்சம்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி 2022-23ம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மின் வாகனம் உறைவிப்பான், குளிர்விப்பான்  போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட, ரூ.45 லட்சம் மட்டும் மானியம்  வழங்க ஏதுவாக, 40 ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்களுக்கு ரூ.36 லட்சம் மட்டும் மானியமாக ஒன்றிய அரசு நிதியிலிருந்து செலவிட நிர்வாக அனுமதி வழங்கியும் மற்றும் 10 பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு ரூ.9 லட்சம் மட்டும் மாநில அரசு நிதியிலிருந்தும் பெற்று வழங்க வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்துவதற்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: