×

விதிமீறல் கட்டிடங்களை வரைமுறை செய்வதற்கு பதில் நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்ப பெறலாமே: ஐகோர்ட் கருத்து

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல்மாடி உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்நிலையில், மனுதாரருக்கு சொந்தமான தரைதளத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக கூறி குடியிருப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கட்டிடத்துக்கு சீல் வைத்த நேரத்தில் அங்கிருந்த மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.  

மாநகராட்சி சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார். அவர், ஆணையரை ஆஜராக உத்தரவிட்டதால் கட்டிடத்துக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்ததாக கூறுவது தவறு என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், வி.ஐ.பி.கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையின் அருகில் விதிமீறல் கட்டிடங்கள் பல ஆண்டுகளாக உள்ளன. விதிமீறல் கட்டிடங்களை அனுமதித்து விட்டு அவற்றை வரைமுறை செய்கிறீர்கள். இதற்கு பதில், விருப்பம் போல் கட்டுமானங்களை மேற்கொள்ளும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்பு சட்டங்களை திரும்பப் பெற்று விடலாம். இந்த வழக்கை பொறுத்தவரை, விதிமீறல்களை சரி செய்ய மனுதாரருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், அதுவரை இந்த வழக்கை தள்ளிவைக்கிறோம் என்றனர்.


Tags : Violation Building, Limitation, Response, Planning Act, Reversal, ICourt Opinion
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...