×

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை-மைசூரு இடையே சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை: தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்  சென்னை-மைசூரு இடையே வெற்றி பெற்றுள்ளது. இந்திய ரயில் தடத்தில் அதிவேக பயணத்தை மேற்கொள்ளும் வந்தே பாரத் ரயில் தன்னுடைய ஐந்தாவது பயணத்தை சென்னையில் இருந்து மைசூர் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 11ம் இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார். ஐந்தாவது வந்தே பாரத் ரயிலின் (சென்னை-மைசூரு) சோதனை ஓட்டம் நேற்று காலை சென்னையில் இருந்து துவங்கியது. சென்னை சென்ட்ரலில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50க்கு புறப்பட்டு அரக்கோணம் வரை 130 கிலோ மீட்டர் வேகம் பயணம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் காலை 8.50 மணிக்கு ஜோலார்பேட்டையை சென்றடைந்தது. அதனை தொடர்ந்து பெங்களூரு ரயில் நிலையத்திற்கு 10.25 மணிக்கு சென்றடைந்தது. அங்கு ஐந்து நிமிடங்கள் நின்ற பிறகு மீண்டும் 10.30க்கு புறப்பட்டு 12:30 மணிக்கு மைசூரை சென்றடைந்தது.மைசூரிலிருந்து சென்னைக்கு பிற்பகல் ஒரு மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டைக்கு மாலை 4:45 மணிக்கும் இரவு 7:45 மணிக்கு சென்னை வந்தடைந்தது. அதாவது அதிகபட்சம் 130 கிலோமீட்டர் வேகத்திலும் சராசரியாக 73 கிலோ மீட்டர் வேகத்திலும் 504 கிலோமீட்டர் தொலைவை 6 மணி நேரம் 40 நிமிடத்தில் கடந்தது.


Tags : South India ,Vande ,Chennai ,Mysore , South India's first Vande Bharat train between Chennai-Mysore runs successfully
× RELATED சென்னை-திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயில்: 2 மாதங்களில் சோதனை