வரும் 15ம் தேதி வரைபடக்குழு கூட்டம் 44 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு: அறநிலையத்துறை ஆணையர் அழைப்பு

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 44 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதையொட்டி, கும்பாபிஷேகம் நடத்த வசதியாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வரும் 15.11.22 அன்று வரைபட குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தலைைமயில், மாமல்லபுரம் அரசினர் மற்றும் சிற்பக்கலை கல்லூரி முதல்வர் முன்னிலையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் திருப்பணிகள் நடைபெற உள்ள 44 கோயில்களின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் பவானி அம்மன் கோயில், திருவண்ணாமலை குகை வரதராஜ பெருமாள் கோயில், திருநெல்வேலி திரவுபதி அம்மன் கோயில், மதுரை மருதப்ப சாமி கோயில், தஞ்சாவூர் சாரங்கபாணி சுவாமி கோயில், நாமக்கல் அங்காளம்மன் கோயில், தேனி பந்துவரர்பட்டி பெருமாள் கோயில், கிருஷ்ணகிரி தேடுகரம் கோயில் உள்ளிட்ட 44 கோயில்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: