மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்கும் உத்தரவை ரத்து செய்ய ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்கும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பெரு மாநகராட்சி தவிர்த்து, 20 மாநகராட்சிகளில் உள்ள பணிகளை வெளிமுகமை மூலம் மேற்கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த உத்தரவில் 35,000க்கும் மேற்பட்ட நிரந்தர பணியிடங்களை 3,500 பணியிடங்களாக குறைத்துள்ளதாகவும், தற்போது பணியாற்றி வரும் பணியாளர்கள் ஓய்வு பெற்றபின் அந்த பணியிடங்களை நிரப்பக்கூடாது என்றும், அந்த பணிகள் வெளிமுகமை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்கும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் காலியாக உள்ள அனைத்து இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: