×

செருப்பில் மகாத்மா காந்தி படம் ஆன்லைன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த முத்துக்குமார் தாக்கல் செய்த பொது நல மனுவில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், செருப்புகள், உள்ளாடைகளில் மகாத்மா காந்தி மற்றும் தெய்வங்களின்  புகைப்படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றன. சர்வதேச ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் இந்த செயல்பாடு இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளது. மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் இந்த செயல்கள் நடக்கின்றன. நாட்டு மக்களிடையே விரோதத்தை தூண்டும் வகையில் செயல்படும் இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய மற்றும் தமிழக அரசுகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் டி.கிருஷ்ணகுமார் அமர்வு, இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி ஒன்றிய மற்றும் தமிழக அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

Tags : Mahatma Gandhi ,Union ,State , Mahatma Gandhi picture in sandals case seeking action against online companies: ICourt notice to Union, State Govts
× RELATED தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி...